துரித முறை பிரகடனத்தின் பின்னணியில் உள்ள கொள்கைகள்



நாங்கள் பின்வரும் கொள்கைகளை பின்பற்றுகிறோம்:

தொடக்கதிலிருந்தே மேன்மையான/சிறப்பான மென்பொருளை
தொடர் விநியோகம் மூலம் அளித்து வாடிக்கையாயாளரை திருப்திப்படுத்துவதே எங்களின் தலையாய முன்னுரிமை.

மென்பொருள் மேம்பாட்டில் இறுதி நிலையில் தேவைகள் மாற்றப்பட்டாலும் அவற்றை வரவேற்கிறோம்.
துரித செயல்முறைகள், வாடிக்கையாளரின் நன்மைக்கான மாற்றத்தை இணைக்கிறது.

குறுகிய காலத்திற்கு முன்னுரிமை அளித்து, இரண்டு வாரங்கள் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு மென்பொருளை வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர் பிரதிநிதிகளுடன் மென்பொருள் உருவாக்குபவர்கள் தினமும் ஒன்றாக பணிபுரிய வேண்டும்.

ஊக்கமுள்ள தனிநபர்களை சுற்றி திட்டங்களை உருவாக்குக.
அவர்களுக்கு தேவையான சூழல் மற்றும் ஆதரவு கொடுத்து, அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்வார்கள் என நம்புங்கள்.

மென்பொருள் உருவாக்கும் அணியிடம் நேர் உரையாடல் செய்வதே, தகவல்களை பரிமாறுவதற்கு மிகவும் சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க முறையாகும்.

செயல்பாட்டு மென்பொருளே வேலை முன்னேற்றத்தை அளவிடக்கூடிய சிறந்த அளவுகோல்.

துரித செயல்முறைகள் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
விளம்பரதாரர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், மற்றும் பயனர்கள் காலவரையின்றி ஒரு நிலையான வேகத்தில் செயல்பட இயலும்.

தொழில்நுட்ப சிறப்பின் மேல் இடைவிடாத கவனமும் மற்றும் நல்ல வடிவமைப்பும், துரிதத் தன்மையை மேம்படுத்துகிறது.

எளிமை -- மீதம் உள்ள வேலையின் அளவை அதிகரித்து காட்டும் கலை -- மிக அவசியம்.

மிக சிறந்த கட்டமைப்புகள், தேவைகள், மற்றும் வடிவமைப்புகள் சுய-ஒழுங்கமைத்துக் கொள்ளும் அணிகளிடமிருந்தே வெளிப்படுகின்றது.

நிலையான இடைவெளியில், அணி தன் செயலூக்கத் திறனை பிரதிபலித்து அவற்றை மறுஆய்வு செய்து அதற்கு ஏற்றவாரு தங்கள் நடவடிக்கைகளை சரிசெய்கிறது.




Return to Manifesto